நல்வரவு

பார்க்கவகுல மக்கள் (உடையார், மூப்பனார், நயினார்) தனக்கென ஒரு சங்கம் உருவாக்கி பல்வேறு தலைவர்களால் நூற்றாண்டைத்தாண்டி பல்வேறு பெயர்களில் வளர்ந்து இன்று பார்க்கவகுல முன்னேற்ற சங்கமாய் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

பார்க்கவகுலம் பாராண்ட காலம் தொட்டு அதன் வரலாற்றையும், டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் வருகைக்குப்பின் வீறுகொண்டெழுந்த பார்கவகுலத்தின் செயல்பாடுகளையும் நீங்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவி செய்யும்.

பார்க்கவர்களாகிய நீங்களும் இந்த பார்க்கவகுல சங்கத்தில் உறுப்பினராகி சங்கத்தையும், உங்களையும் வலுப்படுத்திக் கொள்ள கீழ்கண்ட முகவரியில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு, திருமண தகவல்கள், மருத்துவ உதவிகள், கல்வி வழிகாட்டுதல் போன்றவற்றை பெறுவதற்கும் உங்களுடைய உறுப்பினர் பதிவு பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாவட்டத் தலைவர்களிடமிருந்தும் பா.மு.ச. உறுப்பினர் படிவம் பெற்று தலைமைக்கும் அனுப்பலாம். அந்தந்த மாவட்ட தலைவர்கள் கைபேசி எண் நிர்வாகிகள் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

எங்களைப் பற்றி

பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 31.10.2010 அன்று திருச்சி மாவட்டம், இருங்களூரில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் துவக்கவிழா நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பார்க்கவகுல சங்கத்தின் 840 பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிகள் சுமார் 4,600 பேர் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நிறுவனராகக் கொண்டு இச்சங்கம் உருப்பெற்றது.

பார்க்கவகுல சங்கம் தோன்றியதன் 100-ஆம் ஆண்டு விழாவினையும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் 2-ஆம் ஆண்டு விழாவினையும் ஒன்றாக இணைத்து 2012 ஏப்ரல் 28 ல் விழுப்புரம் மாவட்டம் - உளுந்தூர்பேட்டையில் மிக பெரிய அளவில் மாநாடாக கொண்டாடப்பட்டது, அதில் பல லட்சம் பார்க்கவச் சொந்தங்கள் பங்கேற்று, சிறப்பான வகையில் மாநாடு நடந்தது. அதில் வெளியிடப்பட்ட மாநாட்டு சிறப்பு மலரில் பார்க்கவகுலம் தோன்றிய வரலாறு, 100 ஆண்டுகளில் சங்கத்தின் வளர்ச்சி, அதற்காக பாடுபட்ட வெவ்வேறு தலைவர்களின் கடின உழைப்பு மற்றும் சங்கக்காக ஆற்றிய தொண்டினையும் விரிவாக கான முடியும்.

Parkavan Kural Centenary Matrimony Jobs Mamanigal

சமீபத்திய செய்திகள் (Recent News)

No news items found.